இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் இரண்டு உயர் அதிகாரிகளும் இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் இன்று மாலை 4.20 அளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.