இலங்கையின் முன்னாள் பிரதமர் இன்று காலமானார்

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன சுகயீனம் காரணமாக 88 வயதில் காலமானார்.

கடந்த சில நாட்களாக சுகயீனம் அடைந்த அவர் கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2010 ம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் டி.எம்.ஜயரத்ன பிரதமராக பதவி வகித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான டி.எம்.ஜயரத்ன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த சிரேஷ்ட அரசியல்வாதியாவார்.

1994 ஆம் ஆண்டு அரச காணி, விவசாயம் மற்றும் வன வள அமைச்சராக செயற்பட்டதுடன், விவசாயம், உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும், தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சராகவும் பெருந்தோட்ட அமைச்சராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.