கோத்தபாயவின் சகோதரர் முன்வைத்துள்ள யோசனை!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் அரசியலமைப்பு மாற்றப்படவேண்டும். அத்துடன் 19வது திருத்தம் ரத்துசெய்யப்படவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பொறுத்தவரையில் 19வது திருத்தம் முற்றாக ரத்துச்செய்யப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தம் சில நல்ல விடயங்களை கொண்டுள்ளது. அதேநேரம் பல மோசமான விடயங்களை கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர் அவை எவை என்று கூறவில்லை.

19வது திருத்தம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கிறது. அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் சரத்துக்களை கொண்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிப்பவர்கள் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை தடுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.