புதிய ஜனாதிபதிக்கு மோடி அனுப்பிய தூது! இந்தியா பறக்கத் தயாராகும் கோத்தபாய

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு இணங்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு செல்கிறார்.

இலங்கைக்கு இன்று மாலை விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மோடியின் அழைப்பினை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து மோடியின் அழைப்பை ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.

இதன்போது அதனை கோத்தபாய ஏற்றுக்கொண்டதாக ஜெய்சங்கர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஜெய்சங்கர் நாளை இந்தியாவுக்கு திரும்பிச்செல்கிறார்.