புதிய ஜனாதிபதியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயார்! ஆனால், நிபந்தனை விதித்த அமைச்சர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நடந்து முடிந்த தேர்தலின்படி, மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க தாம் தயார் என நாடாளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நடந்து முடிந்த தேர்தலின்படி, மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க தாம் தயார்.

ஆனால், பொதுத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் பின்னரேயே நடாத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் காணப்படுவதனால், அவர்களுடைய குறிப்பிட்ட கால எல்லை நிறைவடைய முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், அவர்களுக்கு கிடைக்கப் பெறவுள்ள ஓய்வுதியம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

எனவே நாடாளுமன்றத்தின் கால எல்லை முடிவந்த பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவது சரியான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.