வாசுதேவ நாணயக்காரவை சபாநாயகராக்க திட்டம்?

Report Print Kanmani in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்ததும், பிரதமர் பதவியையும் கைப்பற்றி இடைக்கால அரசாங்கத்தை ராஜபக்ச தரப்பினர் அமைத்துள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியிலும் மாற்றம் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவை சபாநாயகராக்குவதற்கான தீவிர ஆலோசனைகள் பொதுஜன பெரமுனவின் கட்சி வட்டாரத்தில் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டு அதில்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துக் கொண்டதுடன்,ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.