பதவி காலத்திற்கு முன்னரே 5 முறை வீடு சென்ற முன்னாள் பிரதமர்!

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார்.

பிரதமரின் உத்தியோகபூர்வமான வாசஸ்தலமான அலரி மாளிகையிலிருந்த அவர் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் அதிக முறை பிரதமர் பதவியில் பணியாற்றிய நபராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.

1993ஆம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக அவர் பிரதமராக பதவி பிரமாணம் செய்து 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்த பின்னர் அவர் பதவியில் இருந்து விலகினார்.

இரண்டாவது முறையாக 2001ஆம் ஆண்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவர் மீண்டும் பதவி இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி மூன்றாவது முறையாக பிரதமராக நியமிக்கப்பட்டார்.

எனினும் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொது தேர்தலின் பின்னர் மீண்டும் நான்காவது முறையாக அவர் பதவி பிரமாணம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் புரட்சியால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் டிசம்பர் மாதம் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

ஐந்து முறை பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்கவினால் ஒரு முறையேனும் முழுமையாக பதவியில் நீடிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.