டி.எம். ஜயரத்ன சுதந்திரக் கட்சியில் இருந்த இறுதியான சிரேஷ்ட தலைவர்: சந்திரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த இறுதியான சிரேஷ்ட தலைவர் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் பிரதமரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நானும் எனது கணவர் விஜயகுமாரதுங்கவும் டி.எம். ஜயரத்னவுடன் மிக நெருங்கி செயற்பட்டோம். டி.எம். ஜயரத்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத நபர்.

அவரது இழப்பு அரசியல் துறைக்கு மிகப் பெரிய நஷ்டம் எனவும் சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.