புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்

எந்தவொரு அமைச்சரும் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். இதன்போது அமைச்சர்களை வாழ்த்தி உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நியமிக்கப்படவுள்ள புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு, அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

இராஜாங்க அமைச்சர்கள் கையொப்பமிட மாத்திரமே பழக்கப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறான குற்றச்சாட்களில் சிக்காமல் சிறந்த முறையில் ஒத்துழைப்புடன் பணியாற்றுங்கள்.

இளம் உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய சிறிய அமைச்சரவை ஒன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் கொள்கைக்கமைய பணி செய்யுங்கள்.

நட்டம் அடைந்த நிறுவனங்களை இலாபம் அடையும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பிரதேசங்ளிலும் உள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் அறிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பார்கள். எனக்கும் பிரதமருக்கும் ஆதரவு வழங்கி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.