சஜித்திற்கு தலைவர் பதவியை வழங்குமாறு கோரி சத்தியாகிரகப் போராட்டம்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு கோரி, அந்த கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு எதிரில் ஒருவர் இன்று சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ரணில் அவர்களே போதும் சஜித்திடம் தலைமைத்துவத்தை வழங்குங்கள் என எழுதப்பட்ட பாதாதையை காட்சிப்படுத்தி அந்த நபர்கள் இன்று காலை முதல் இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைவர் பதவியை வழங்கும் வரை தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அந்த நபர் அறிவித்துள்ளார்.