சஜித்தின் தேர்தல் பிரசாரத்திற்கு கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்திற்காக அலரி மாளிகைக்கு கிடைத்த தேர்தல் நிதிக்கு என்ன நடந்தது என்பது இன்னும் இரகசியமான விடயமாக இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

வர்த்தகர்கள் அலரி மாளிகைக்கு சென்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பெருந்தொகை பணத்தை ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கியுள்ளனர்.

எனினும் அந்த பணம் சஜித் பிரேமதாசவின் தேரர்தல் பணிகளுக்கு கிடைக்கவில்லை.

இதனால், அவரது தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக கொழும்பு வோக்சோல் வீதியில் இருந்த தேர்தல் பிரசார அலுவலகத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிய ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இது தொடர்பாக அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக கேள்வி எழுப்பி இருந்தார்.