சஜித் தலைமையில் போட்டியிட்டால் 100 ஆசனங்களை கைப்பற்ற முடியும் - ஹிருணிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டால் சுமார் 100 ஆசனங்களை கைப்பற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள், நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது புதிய தோற்றத்தில் நாம் தேர்தலுக்கு செல்ல வேண்டும். புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்த ஆண்டுகளில் அவர்கள் எப்படி ஆட்சி நடத்த போகிறார்கள் என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். பலமிக்க எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

இல்லாவிட்டால் கட்சி அழிந்து விடும். சஜித் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டால், அரசாங்கத்திற்கு இணையான பலத்தை பெற முடியும். இல்லாவிட்டால் எமது எதிர்காலம் இருண்டு போய்விடும் எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.