சிங்கள மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை ஐ.தே.கட்சியின் தலைமையிடம் கூறினேன் - மனோ கணேசன்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சிங்கள பௌத்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்பதை பல முறை அந்த கட்சியின் தலைமைத்துவத்திடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டங்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிடம் இதனை கூறியுள்ளேன்.

அத்துடன் ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் போன்று சிங்கள பௌத்த மக்களை கவர்ந்து அந்த மக்களை கட்சியின் பால் ஈர்க்க பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டும் என தான் கூறியதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த தர்மம் என்பது சகல மக்களுக்கும் பாதுகாப்பான தர்மமே அன்றி எந்த மதத்தையும் பின்பற்றும் மக்களை அச்சுறுத்தும் மதம் அல்ல என தான் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.