கடமைகளை பொறுப்பேற்றார் ஆறுமுகன் தொண்டமான்

Report Print Thirumal Thirumal in அரசியல்

தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமான் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வு, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது, அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள், அமைச்சரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் மாரிமுத்து, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தொழிற்சங்க உதவி செயலாளர் பரத் அருள்சாமி என முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.