நாங்கள் இனத்துவேசம் கொண்டவர்களல்ல என்பதை இத்தேர்தல் உணர்த்தியிருக்கின்றது! செல்வம் எம்.பி

Report Print Theesan in அரசியல்

நாங்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இப்பொழுது தேர்தல் முடிந்திருக்கின்றது. இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

ஒன்று பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு தமிழ் சமூகம் தேசிய இனம் வாக்களித்தது. அதே நேரத்தில் பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது.

நாங்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை இந்த தேர்தலின் மூலம் நாங்கள் நிரூபித்திருக்கின்றோம்.

நாங்கள் எங்களுடைய தேசத்திலே நடைபெற்ற அத்தனை பிரச்சினைகளையும் மறக்க முடியாத வடுக்களாக எங்களுடைய நெஞ்சங்களிலே நாங்கள் இன்றைக்கும் சுமந்திருக்கின்றோம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்த தேர்தலிலே நீங்கள் அச்சப்படத் தேவையில்லை.

தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்ற ஒரு அச்சத்தோடு நாங்கள் எங்களுடைய மக்கள் வாழ்கின்றார்கள். அச்சப்பட வேண்டாம். அச்சப்படத் தேவையில்லை. எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தவர்கள் நாங்கள். எவ்வளவு வடுக்களை இன்றைக்கும் சுமந்து கொண்டு இருக்கின்ற இனம் எங்களுடைய தமிழ் பேசுகின்ற இனம். ஆகவே அந்த நிலைக்கும் அதுக்கு மேல் தலை முழுகும் அளவுக்கு நிலைமைகள் மாறும். நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக என குறிப்பிட்டுள்ளார்.