தைரியத்தை இழக்காது பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: ஜோன் அமரதுங்க

Report Print Steephen Steephen in அரசியல்

தோல்வியால் தைரியத்தை இழக்காது அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

துரதிஷ்டவசமாக ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறும் நினைத்தேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அமைச்சரவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்றேன். வெற்றியும் தோல்வியும் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் பொதுவான விடயம் எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.