ஐ.தே.கட்சியில் ரணில் - சஜித் என அணிகள் கிடையாது: விஜித் விஜயமுனி சொய்சா

Report Print Steephen Steephen in அரசியல்

ரணில் விக்ரமசிங்க அணி மற்றும் சஜித் பிரேமதாச அணி என இரண்டு அணிகள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த 55 லட்சம் மக்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்திற்காக கடந்த அரசாங்கம் மற்றும் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்பது தெளிவாக காணக் கூடியதாக இருந்தது. தேர்தலை தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக நடத்தியது. முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு இருந்தது.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை நியாயமான ரீதியில் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.