அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றார் டக்ளஸ்!

Report Print Sumi in அரசியல்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் இன்றையதினம் குறித்த அமைச்சை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றிருந்தார்.

கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டது.

இதனையடுத்து கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.