தலைவர்களாகவும் பணிப்பாளர்களாகவும் தகுதியானவர்களே நியமிக்கப்படுவர்! ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசக்கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான தலைவர்கள் தெரிவுச்சபை ஒன்றின் ஊடாகவே நியமிக்கப்படுவர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தலைவர்களாகவும் பணிப்பாளர்களாகவும் தகுதியானவர்களே நியமிக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்கள் கடந்த காலங்களில் நட்டத்தை எதிர்நோக்கிய நிறுவனங்களாகவே இருந்து வந்தன. அவற்றை இலாபம் உழைக்கும் நிறுவனங்களாக மாற்றவேண்டும். எனவே நிறுவனங்களுக்கு உரிய தகுதியானவர்களையே நியமிக்கவேண்டும் என்று கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் திறன் சார்பற்ற பதவிகள் இருப்பின் அவை பிரதேசத்தில் வசிக்கும் வறியவர்களுக்கு வழங்கப்படவேண்டும். இதனை அமைச்சர்கள் உறுதிசெய்யவேண்டும்.

ஒரு அமைச்சர் எல்லாப்பதவிகளையும் வழங்கும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதனை ஜனாதிபதி செயலகம் கண்காணிக்கும் என்றும் கோட்டாபய குறிப்பிட்டார்.