விடுதலைப் புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரிகமா? வன்னியரசு கடும் கண்டனம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

புலிகளை அழித்துவிட்டதாக அறிவித்த பிறகும் விடுதலை புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரிகமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனைபடை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி, டி.ஆர்.பாலு பேசும்போது, விடுதலை புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

தி.மு.க. எம்.பி, டி.ஆர்.பாலுவின் இப்பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் தேசத்தின் பாதுகாவலர்கள். சிங்கள, பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம்மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்துவிட்டதாக அறிவித்த பிறகும் விடுதலை புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என்று பதிவிட்டுள்ளார்.