மைத்திரியை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை! பௌசி தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரவே தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம். பெளசி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம். பெளசி நீக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு இடம்பெற்றால் அதற்கெதிராக சட்ட ரீதியிலாக நடவடிக்கை எடுப்பேன்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரவே எனக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்புகிறேன் என்றார்.