எந்த நேரமும் எனக்கு அழைப்பு எடுக்கலாம்! புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டுக்காக எந்த நேரத்தையும் அர்ப்பணிக்க தயாராகவுள்ளதுடன், நேர காலம் பாராது மக்களுக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முடிந்தவரை சரியாக நிறைவேற்ற உள்ளேன் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றுபதவியேற்றுக் கொண்டதுடன், அவர்கள் தத்தமது அமைச்சுக்களில் கடமைகளை பொறுப்பேற்றனர்.

இதன்படி, பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சராக நியமனம் பெற்ற மஹிந்த அமரவீர இன்று தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார். இதன்பின்னர் பேசிய அவர்,

நாட்டுக்காக எனது காலத்தையும் நேரத்தையும் அர்ப்பணித்து நாட்டை முன்னேற்ற பங்களியாக வேண்டியது அவசியம்.

தலைமைத்துவம் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டது அல்ல என்பதால் அதனை அரசாங்கத்தின் கீழ்மட்டத்தில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். எனவே மேலிருந்து கீழ் மட்டம் வரையில் உள்ளவர்கள் அவற்றை செய்வதில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

மக்களுக்காக உணர்வுடனும் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டியது அவசியம். மக்கள் சேவைக்காக எனது தொலைப்பேசி நள்ளிரவு 12 மணி வரை இயங்கும்.

நாட்டுக்காக எந்த நேரத்தையும் அர்ப்பணிக்க தயாராகவுள்ளேன், நேர காலம் பாராது மக்களுக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முடிந்தவரை சரியாக நிறைவேற்ற உள்ளேன் என்றார்.