ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு சஜித் மட்டும் பொறுப்பல்ல! திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கு ஒருவர் மாத்திரம் பொறுப்பேற்கமுடியாது. கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தோல்விக்காக ஒருவரை ஒருவர் குறைக்கூறுவது மீண்டும் சஜித் பிரேமதாஸ மீளெழுவதை தடுத்துவிடும்.

எனவே அவரின் தோல்விக்கு கட்சியின் அனைத்து தரப்புமே பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தாம் இந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் தயங்கவில்லை என்றும் அத்தநாயக்க கூறியுள்ளார்.