கடும் நெருக்கடியில் ஐக்கிய தேசிய கட்சி! முடிவின்றி தடுமாறும் ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவுக்கு வருமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை மற்றும் எதிர்வரும் அரசியல் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி தலைமைத்துவம் மற்றும் கட்சியின் தலைவர் தொடர்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற பின்னடைவு தொடர்பில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் கட்சி தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்குள் இன்னமும் பரஸ்பர கருத்துக்களே காணப்படுகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருவராலும் பலவந்தமாக பெற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.