ராஜாங்க அமைச்சு பதவியிலும் முஸ்லிம்கள் புறக்கணிப்பா?

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அல்லாத முழு அமைச்சர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 38 ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அமைச்சரவை அல்லாத ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 40ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

16 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், 35 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 3 பிரதியமைச்சர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் முஸ்லிம்கள் எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 38 பேர் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.