புதிதாக பதவியேற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சர்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன், இராஜாங்க அமைச்சர்களின் கடமைகளை செய்வதற்கு அவர்களுக்கு இடமளியுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவியேற்பின் பின்னர் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் இதற்கு முன்னரும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளேன். இது மக்களுக்கு சேவை செய்யும் சிறந்த சந்தர்ப்பமாகும். அதேபோல இது மிகப்பெரிய சவாலாகும். இதனை சரிவர செய்வீர்கள் என நான் நம்புகின்றேன்.

அமெரிக்காவில் இருந்து எனது நண்பரொருவர் வந்திருந்தார். அவரின் தேவைக்கு ஒரு அரச நிறுவனம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவரை நான்காவது மாடியில் உள்ள அலுவலரை சென்று பார்க்குமாறு அனுப்பியுள்ளார்கள்.

ஆனால், அவர் அங்கு சென்றவேளை அங்கு யாரும் இருக்கவில்லை. 12 பேர் பணிப்பாளர்களாக கடமையாற்றும் குறித்த பகுதியில் ஒருவரும் அந்த சமயம் கடமையில் இல்லை. அதன் பின்னர் அது தொடர்பில் எனக்கு புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டு வந்து காட்டினார்.

12 பேர் பணிப்பாளர்களாக இருந்த அந்த பகுதியில் ஒருவரும் பணியில் இல்லை. வெட்கப்பட வேண்டியுள்ளது. இவ்வளவு சேவையாளர்கள் இருந்தும் இப்படி எமது அரச சேவை மோசமான நிலையில் உள்ளது.

இதனை மாற்றியமைத்து நீங்கள் சேவையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார்.