பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் கோரும் சுதந்திரக் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு அந்த கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இரண்டு கட்சிகள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமைச்சரவையில் நான்கு இடங்கள் வழங்கப்பட வேண்டும்.

எனினும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த, இரண்டு பேரே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.