முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நவ சிங்களே தேசிய அமைப்பினர் இன்று பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் டேன் பியசாத், முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன், தவ்ஹித் ஜமாத் உறுப்பினர்கள் பயணிக்க சதோச நிறுவனத்தின் வாகனங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதன் மூலம் அவர் அரச வளத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் எனக் கூறியுள்ளார்.