ஐ.தே.கட்சி முதலில் ஐக்கியமாக வேண்டும்! பாலித தெவரப்பெரும

Report Print Steephen Steephen in அரசியல்

அனைத்து இனங்களும் ஐக்கியமாகும் முன்னர், ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியமாக வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளிடம் ஐக்கியம் இல்லாத காரணத்தினால், இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தோம். இதனால், முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஐக்கிய ஏற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்