எதிர்பார்த்த வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும்: கெஹெலிய

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த நான்கரை ஆண்டுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கவில்லை என்பதால், நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் எதிர்பார்த்ததை போன்று வெளிநாட்டு முதலீகள் வரும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

நாட்டில் இல்லாது போயிருந்த தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை உறுதிப்படுத்தப்படும் என்பதே ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் எமது பிரதான கோஷமாக இருந்தது.

தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையும் தேசிய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள என்ற செய்தி சர்வதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற அத்தியவசியமானவை என்பதை அனைவரும் அறிவார்கள்.

நாட்டில் தற்போது நாங்கள் அந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம். அனைவருக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதமான, நாட்டுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்த வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதே தற்போது எமக்குள்ள பொறுப்பாகும். இதற்காக வெற்றிகரமான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தயார். இதற்கு தேவையான அறிவும் பலமும் எம்மிடம் உள்ளது.

கண்டி மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்ற சிறிய கவலை இருக்கின்றது. இதற்கு ஏதுவான காரணங்களை இந்த சந்தர்ப்பத்தில் பேச போவதில்லை எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.