ஜோன் அமரதுங்க எடுத்துள்ள தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

இளைய தலைமுறைக்கு சந்தர்ப்பத்தை வழங்கி, தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வத்தளை தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 41 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளதாகவும் அரசியல் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் வத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்த போது கட்சியினர் அதனை கடுமையாக எதிர்த்தனர் எனவும் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers