வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்! வெளியானது அறிவிப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும், வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவியேற்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாளை மறுநாள் 29ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கான முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். இதன்போது வடக்கு மாகாணத்தின் ஆளுநரையும் உடன் அழைத்துச் செல்வார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே தற்போது ஆளுநர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது