அமெரிக்காவின் தகவலை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்!

Report Print Ajith Ajith in அரசியல்

சர்ச்சைக்குரிய மிலேனியம் சேலெஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை இலங்கையில் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்கள அதிகாரி எலீஸ் வெல் தெரிவித்துள்ள தகவலை இலங்கையின் புதிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கை அரசாங்கத் தரப்பு தகவல்படி இந்த உடன்படிக்கையின் உள்ளார்ந்த விடயங்களை ஆழமாக ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இந்த தகவலை வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த உடன்படிக்கை ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்