மீண்டும் உறுப்பினர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ள ரணில்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்திக்கவுள்ளார்.

இன்றும் அவர் சிறிகொத்தாவில் வைத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்து அங்கு ஆராயப்பட்டன.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அடிமட்டத்தில் இருந்து மீளமைக்கப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை மீண்டும் சந்தித்து கட்சியை மீளமைப்பது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய சந்திப்பின்போது சஜித் பிரேமதாஸவை கட்சியின் செயலராக நியமிக்குமாறு பலரும் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.