கோட்டாபயவின் இந்திய விஜயம் தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட தரன்ஜித் சிங் சந்து!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபயவின் சர்வதேச விஜயத்திற்குரிய முதலாவது நாடாக இந்தியா அமைந்துள்ளமை இருநாடுகளினதும் பிணைப்பை வெளிப்படுத்துயுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

லலித் அதுலத்முதலியின் 83 ஆவது பிறந்தநாள், 26/11 மும்பை தொடர்குண்டுத்தாக்குதல்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு தினம் ஆகியவற்றையொட்டி லலித் அதுலத்முதலி அமைப்பு, சுதந்திரத்திற்கான பிரெட்ரிச் நௌமன் அமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கும் தலைமைத்துவத்திற்குமான நிலையம் என்பன ஒன்றிணைந்து நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுப்பேருரை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அந் நிகழ்வில் கலந்துகொண்டு 'பகிரப்பட்டதும், பாதுகாப்பானதுமான எதிர்காலத்திற்கான இலங்கை - இந்திய உறவுகள்' என்ற தலைப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் லலித் அதுலத்முதலி நினைவுப்பேருரை ஒன்றை ஆற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் மேற்கொள்ளும் சர்வதேச விஜயத்தில் முதலாவது நாடாக இந்தியாவைத் தெரிவு செய்திருக்கிறார்.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

இத்தகைய அனைத்து உயர்மட்ட உறவுகள் மற்றும் விஜயங்கள் என்பன இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பையே எடுத்துக்காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.