அமைச்சுக்களில் வீண் விரயம் செய்யும் அமைச்சர்களுக்கு சிக்கல்! ஜனாதிபதி நடவடிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

அத்தியாவசியமற்ற செலவுகளை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வாகனம், பயணங்கள், கட்டட வசதிகள் ஆகியவற்றிக்காக ஏற்படும் செலவு உட்பட அத்தியமற்ற செலவுகளை தவிரக்குமாறு அனைத்து அமைச்சுகளிடமும் அரச நிறுவனங்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொருட்கள் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளமையினால் அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள செலவுகள் உட்பட அரச செலவுகளை குறைக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களை மீண்டும் மீள் திருத்தம் செய்வதற்கு சில காலம் எடுக்கும் என்பதால் அரச நிதியை செலவு செய்யும் போது அவதானமாக செயற்படுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.