முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் ஜீ.எம்.ஓ உறுப்பினர்கள்!

Report Print Steephen Steephen in அரசியல்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகள் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்தமை சம்பந்தமாக சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் எனவும் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.