தவறு செய்தால் திருத்திக்கொள்ள ஓராண்டு மாத்திரமே கால அவகாசம்! எல்லே குணவங்ச தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் சரியான வழியில் பயணிப்பது அவசியம் எனவும் தவறுகள் இருந்தால், அவற்றை திருத்திக்கொள்ள அரசாங்கத்திற்கு ஒரு வருட கால அவகாசமே வழங்கப்படும் எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மீண்டும் தவறினால் நாட்டை மீட்டெடுக்க முடியாது. அதேவேளை சர்வதேச உடன்படிக்கைகளால் நாடு பாரதூரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.