மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Report Print Mubarak in அரசியல்

திருகோணமலையில் அமைந்துள்ள மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச சபைக் கூட்டம் இன்று சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்கள் 24 பேரில் 23 உறுப்பினர்கள் வாக்களித்தததோடு, சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏம்.நௌபால்தீன் மாத்திரம் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.

இந்நிலையில் மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்ட நிதியாக 180 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதி ஆகக் கூடுதலாக வீதி மின்விளக்கு பொருத்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை விட 2020ஆம் ஆண்டுக்கான வரவு சிறப்பாக இருப்பதாக சகல உறுப்பினர்களும் சிலாகித்து பேசியமையும் குறிப்பிடத்தக்கது.