ஜனாதிபதி அலுவலகத்தினால் 6 பேர் கொண்ட குழு நியமனம்

Report Print Rakesh in அரசியல்

அரச நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்குத் திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகம் ஆறு தொழில் வல்லுநர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

முன்னாள் அமைச்சரவையின் செயலாளரும் அரச துறை பற்றிய விரிவான அனுபவங்களைக் கொண்டவருமான சிரேஷ்ட அரச அதிகாரி சுமித் அபேசிங்கவின் தலைமையிலான இந்தக் குழுவில் பிரசன்ன ரத்நாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், கலாநிதி பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தகைமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் தொடர்பான பரிந்துரையை 2019 டிசம்பர் 18ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் இந்தக் குழுவுக்கு அறிவித்துள்ளது.