சுவிஸ் தூதரகம் தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல - அகில விராஜ் காரியவசம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்து ஆரம்பத்தில் சில தினங்களில் சிறந்த மாற்றங்களை காணக் கூடியதாக இருந்த போதிலும் நல்லவிதமான எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பெண் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அகில விராஜ்,

சுவிட்ஸர்லாந்து தூதரகம் தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அவற்றில் ராஜதந்திரிகள் இருக்கின்றனர். நாடு என்ற முறையில் ராஜதந்திர நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வது அத்தியாவசியமான விடயம்.

ஒரு தூதரகத்தின் மீது கை வைத்தால், முழு உலக நாடுகளின் தூதரகங்களால் அது உன்னிப்பாக அவதானிக்கப்படும். சுவிட்ஸர்லாந்து தூதரகத்தை இலங்கையில் நடத்திச் செல்வதா இல்லையா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ராஜதந்திர ரீதியான பாரதூரமான பிரச்சினை.

அமைச்சரவையின் எண்ணிக்கை 15 ஆக குறைத்ததை நாங்கள் பார்த்தோம். நல்லது, மாற்றம் ஏற்படுகிறது என்று நினைத்தோம். ஒரு வாரம் செல்லும் முன்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். ராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரவை சிறப்புரிமையே வழங்கப்பட்டுள்ளது எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.