ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கு பயணம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இருதரப்பிலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செல்லும் முதல் வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.