ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றும் நபர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

சில மோசடியான நபர்கள் மற்றும் அணிகள் தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாக கூறி, மக்களை ஏமாற்றி மோசடியான முறையில் சாதகங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவது பற்றி சாட்சியங்களுடன் தகவல்கள் கிடைத்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதவிகள், நியமனங்கள், கேள்வி மனுக்களை பெற்று தர முடியும் என கூறி இவர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இவ்வாறான நபர்களில் சிலர் தம்மால் ஜனாதிபதி அழுத்தங்களை கொடுக்கும் பலம் இருப்பதாக கூறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளுக்கு அமையவே வேலை செய்ய வேண்டும் என்பதே ஜனாதிபதியின் ஸ்திரமான நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இதற்கு புறம்பான முறையில் பதவிகள், நியமனங்கள் மற்றும் கேள்வி மனுக்களை வழங்க அவரை இணங்க வைக்க எவருக்கும் முடியாது.

இதனால், இப்படியான ஏமாற்றும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இலாபம் பெற முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளார்.