கிழக்கு முனையத்தை துரித கதியில் அபிவிருத்தி செய்ய வேண்டும்! ஜோன்ஸ்டன்

Report Print Malar in அரசியல்

உரிய முறைகள் இன்றி தற்பொழுது வரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிழக்கு கொள்கலன்கள் முனையத்தின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதகதியில் முன்னெடுத்து பெருமளவான கப்பல் நிறுவனங்களை ஈர்த்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அத்தியாவசியமானது என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இம்முனையத்திற்காக பாரந்தூக்கிகளை இன்னும் கொள்வனவுச் செய்யவில்லை. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்துடன் இச்செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் அரச மற்றும் தனியார் கூட்டுரிமை முறையிற்கு செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. எப்படியேனும், இம்முனையத்திற்கு பாரந்தூக்கிகளை கொண்டுவந்து இம்முனைய செயற்பாடுகளை ஆரம்பிப்பதென தீர்மானித்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனடிப்படையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 2019ஆம் ஆண்டு மே மாதம் கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் பாரந்தூக்கிகளை ஜப்பானிய அரசாங்க விநியோகஸ்தரிடமிருந்து கொள்வனவுச் செய்ய வேண்டும். இதன்பொருட்டு குழுவொன்றினை நியமித்த போதிலும் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை.

கூட்டுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எம்முடைய பணத்தை கொண்டு பாரந்தூக்கிகளை கொள்வனவுச் செய்வதற்கான திறன் எம்மிடமிருந்தமையினால் அமைச்சரவை அனுமதியுடன் இந்த பாராந்தூக்கிகளை கொள்வனவுச் செய்வதற்கு தீர்மானித்தோம். ஆனால், அத்தீர்மானத்தையும் எம்மால் நிறைவேற்ற இயலவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers