நாட்டில் மேலும் பல மாற்றங்களை செய்யவுள்ளோம்! பந்துல குணவர்த்தன

Report Print Malar in அரசியல்

பாதாளத்தில் தள்ளப்பட்ட நாட்டை கட்டியெழுப்ப முதலில் எமக்கு பெரும்பான்மை அரசாங்கம் தேவை, அதனை உறுதிசெய்த பின்னர் நாம் மேலும் பல மாற்றங்களை செய்யவுள்ளோம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாம் கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினால் நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும் அதனால் வலுமாற்றத்தை ஈட்ட முடியும்.

புகையிரத சேவையை எடுத்துக் கொண்டால் அதற்கு பாரிய காணிகள் உள்ளன. அவை அனைத்தும் அவர்களின் நன்மைகளுக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கங்கா ராமை விகாரையில் நான் இன்று பகல் சாப்பிட்டேன். ஐந்து நட்சத்திர விடுதிகளில் இல்லை. எனவே, நாம் புதிய பாதையில் பயணிக்கிறோம். உதாரணமாக ஜனாதிபதியின் இந்திய சுற்றுலாவை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு ஜனாதிபதி போனால் 150 பேர் செல்வார்கள். ஆனால், இம்முறை ஜனாதிபதியும் 10 அதிகாரிகளுமே சென்றனர். நம் செலவை குறைத்துள்ளோம்.

தேயிலை, மிளகு, கருவா, ரப்பர் போன்றவை இங்கு கொண்டுவரும் போது வரி அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.