சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

Report Print Dias Dias in அரசியல்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகளிலும், புலம்பெயர் தமிழர் தேசங்களிலும், நேற்றைய தினம் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த வகையில், தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசிலும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.