ஐ.தே.கட்சியின் பிரச்சினைக்கு 48 மணிநேரத்திற்குள் தீர்வு: மனோ கணேசன்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சி பதவி தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த 48 மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்த வகையிலும் பிளவு ஏற்படாது எனக் கூறியுள்ளார்.

அதேவேளை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஐக்கியமாக முன்னோக்கி செல்லும் கட்சி. அத்துடன் சஜித் பிரேமதாச தற்போது சுகவீனமாக இருக்கின்றார். இதனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அடுத்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.