மத்தள போல பலாலியில் மிளகாய் களஞ்சியப்படுத்தப்படாது! பிரசன்ன ரணதுங்க

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த அரசாங்கம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்திய போல, பலாலி விமான நிலையத்தில் மிளகாயை களஞ்சியப்படுத்த தற்போதைய அரசாங்கம் தயாரில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை விற்பனை செய்வது கடந்த அரசாங்கத்தின் கொள்கையாக இருந்த போதிலும் அந்த கொள்கை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கத்தின் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தனது அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிர்வாகத்தினர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டனர். ஊழியர்களின் உரிமைகள் தொடர்பாக எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.