இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்ற பிரதியமைச்சர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக நேற்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக அனுருத்த ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதாக தெரியவருகிறது.

தான் உட்பட ஏனைய இருவரையும் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து ஜனாதிபதி இந்த புதிய பதவிகளை வழங்கியதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தாம் நேற்று பிற்பகல் 4.45 அளவில் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், காலையில் மீன்பிடி, நீரியல்வள பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட காஞ்சன விஜேசேகர பிற்பகல் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

அத்துடன் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட நிமல் லன்சா, பின்னர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட இந்திக அனுருத்த, பின்னர் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில், புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதுடன் பிரதியமைச்சர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.