சர்வதேச கொள்கைகள் தொடர்பில் கோட்டாபயவின் நிலைப்பாடு! அமைச்சர் தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எமது அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் எவ்வாறானது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெளிவாக கூறியுள்ளார் என சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சராக வெளிவிவகார அமைச்சில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போது கருத்துரைத்த அவர்,

எந்தவொரு சர்வதேச சக்திக்கும் தலைசாய்க்காத சுயாதீனமான நாடாக இலங்கை செயற்படும்.

எமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு நாட்டுக்கும் தலையிட முடியாத வகையில் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

சகல நாடுகளுடனும் நட்புறவு ரீதியில் பயணிக்க வேண்டுமே தவிர எந்த முகாமையும் சார தயாராக இல்லை.

எமது அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் எவ்வாறானது என்பதை ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார். சர்வதேச விவகாரங்களில் நாம் கவனமாக பயணிக்க வேண்டியுள்ளது. எமது சர்வதேச கொள்கையானது சர்வதேசத்துடன் பிளவுபடாத கொள்கையாகும் என்றார்.